David Foster Wallace Lyrics

ரெண்டு குட்டி மீன்கள் 

மெல்ல நீந்தி போச்சாம் 

தாத்தா ஆமை ஒன்னு 

மீன ரெண்டும் தாண்டி போச்சாம் 

அப்போ தாத்தா ஆமை 

மீன்கள் கிட்ட கேட்டுச்சாம் 

தண்ணி எப்படி எப்படி 

தண்ணி எப்படி இருக்குன்னு 

தம்பி மீனும் அண்ணன்

மீனத்தான் பாத்து 

தண்ணியுன்ன என்ன 

அப்படின்னு கேக்க 

அண்ணன் மீனும் தம்பி

மீனதான் பாத்து 

எனக்கென்ன தெரியும் 

அப்படின்னு சொல்ல 

டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் 

சொன்ன கத இது 

உத்து கேட்டீனா 

உண்மை இருக்குது 

டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் 

சொன்ன கத இது 

நானும் வாழ வாழ 

நல்லா புரியுது 

பஸ் குள்ள பாத்தா 

கூட்டம் அலைமோதும் 

எல்லார் தலையிலும் 

ஒரு படம் ஓடும் 

பொக்க வாயும் சரி 

மொக்க நாயும் சரி 

அவன் அவன் படத்துல 

அவன்தான் தெறி 

யாராச்சும் கால மிதிச்சா 

அவன வெட்ட தோணும் 

அவனும் கூட்டத்துல சிக்கி இருக்கான் 

மறந்து போகும் 

நல்ல வாழ்ந்தவனுக்கு 

வாழ்ந்தது படமா ஓடும் 

வாழ காத்திருந்த 

கடிகாரம் கிர்ருனு ஓடும் 

நிகழும் நொடி மட்டும் 

எந்த படத்திலும் ஓடாது 

இந்த நொடி மட்டும் 

கணக்குல சேராது 

இப்போ புரியுது இப்போ புரியுது இப்போ புரியுது…..

தண்ணி இதுதான் தண்ணி இதுதான் தண்ணி இதுதான்  

இதுதான் இதுதான் தண்ணி

தண்ணி இதுதான் தண்ணி இதுதான் இந்த நொடிதான்

இதுதான் இதுதான் தண்ணி

தண்ணி இதுதான் தண்ணி…

டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் 

சொன்ன கத இது…

Rendu Kutti Meengal

Mella Neenthi Pochchaam

Thaatha Aamai Onnu 

Meena Rendum Thaandi Pochchaam

Appo Thaatha Aamai 

Meengal Kitta Kettuchaam

Thanni Eppadi Eppadi

Thanni Eppadi Irukkunu

Thambi Meenum Annan 

Meenathaan Paathu

Thanniyunna Enna 

Appadinu kekka

Annan Meenum Thambi

Meenathaan Paathu

Enakkenna Theriyum 

Appadinu Solla 

David Foster Wallace 

Sonna Kadha Idhu

Uththu Kettina 

Unma Irukkuthu 

David Foster Wallace 

Sonna Kadha Idhu

Naanum Vaazha Vaazha

Nalla Puriyuthu

Bus Kulla Paatha

Kootam Alamodhum

Ellaar Thalayailum

Oru Padam Odum

Bokka Vaayum seri

Mokka Naayum seri

Avan Avan Padathula 

Avan Thaan Theri

Yaarachum Kaala Midhucha

Avana Vetta Thonum

Avanum Kootathula Sikki Irukkaan 

Maranthu Pogum

Nalla Vaazhnthavanukku

Vaazhnthathu Padama Odum

Vaazha Kaathiruntha 

Kadikaaram Kirrunu Odum 

Nigazhum Nodi Mattum

Endha Padathilum Odaathu

Intha Nodi Mattum

Kanakkula Seraathu

Ippo Puriyuthu Ippo Puriyuthu Ippo Puriyuthu…

Thanni Ithu Thaan Thanni Ithu Thaan Thanni
Ithu Thaan Ithu Thaan Ithu Thaan Thanni

Thanni Ithu Thaan Thanni Ithu Thaan
Indha Nodi Thaan Ithu Thaan Ithu Thaan Thanni

Thanni Ithu Thaan Thanni Ithu Thaan…

David Foster Wallace 

Sonna Kadha Idhu…