Jaathithaan Lyrics

உன் ஜாதித்தான் உன் வரலாறு

அங்கதான் நிக்குது தகராறு 

ஏன்னா யாருக்கும் வரலாறு தெரியாது 

வரலாற்றில் சுத்த உண்மைகள் கிடையாது 

உன் முப்பாட்டன் தான் பெரும் புடுங்கி 

நீ வெறும் தொடை நடுங்கி 

அவன் கத்து தந்த பல நூறு வித்த 

நீ வெறும் சில்லறையை மட்டும் சேக்க வித்த 

ஆத்திரம் புளிச்ச பின்னே 

ஆராய்ந்து பார்க்க போனேன் 

சுயநலத்தை ஒதுக்கி வச்சு 

நிதர்சனத்துல யூகிச்சேன் 

ஆறு ஏழு நியாய மனிதர் 

நிஜமாவே ஒத்திகை பாத்து 

என் யூகம் சத்திய கதிரின் 

நிழலுன்னு ஒத்துக்கிட்டு 

பரிசோதனை பண்ணித்தானே 

என் யூகம் உண்மையாச்சு 

உன் வாதம் உத்து கேட்டா

அடுக்கடுக்கா புரளிப்பேச்சு 

நான் புழு உணவாகி 

கடந்து போன பின்னும் 

விட்டு சென்ற உண்மையெல்லாம் 

தேடும் டார்ச் ஒளியில் மின்னும்   

ஒரு வேலை என் காலத்தில் 

ஊருக்கெல்லாம் புத்தி முளைச்சு 

ஆத்திரத்த அடக்கி வச்சு 

ஒரு மனமாய் உண்மை தேடினால் 

என் காலத்தின் உண்மைகள் 

என் மையில் எழுதி இருக்கும் 

எட்டிய செவியெங்கும் 

உள் ஆராய்ச்சி துவங்கி இருக்கும்   

ஒரு வேளை நாளை நமக்கு 

இந்த கேள்விக்கும் பதில் கிடைக்கும்

என்னன்னா

ரௌத்திரம் ஓங்கியாச்சு 

கலாய்ச்சு சிரிச்சாச்சு 

கோவமா பொங்கியாச்சு 

யோசிக்க பழகியாச்சா

ரௌத்திரம் ஓங்கியாச்சு…

ரௌத்திரம் ஓங்கியாச்சு…

இருளில் தவிக்கிறோம் என்று 

தலைவனை தேடி சென்று 

மூணு அடி முன்னே பார்க்க 

எவனுமே இல்லை என்று 

ஆங்காரம் ஆறிப்போக 

சமத்துவம் மறந்து போக 

சுற்றி உள்ள மனிதர் எல்லாம் 

துக்கத்தில் சூழ்ந்து போக 

எதிர்காலத்தின் சரத்திரி 

வரலாறின் தீப்பொறி 

இடையே ஒரு ஓட்டை வாளியில்  

நீதி நதி நீரை கொண்டு நாமும் 

பரம்பர பெருமைய 

மைக்-அ போட்டு கொண்டாடுறோம் 

சேத்து வந்த பாவத்தெல்லாம் 

செம்மையா பந்தாடுறோம் 

சொகுசுல வளர்ந்த நாம 

சலுகைகள் வேண்டாங்குறோம் 

கண்ணக்கட்டி காதப்பொத்தி 

சமுதாயம் சமம்ங்குறோம் 

நம்மோட சலுகைகளோ

அமைப்பில் ஒளிந்திருக்க 

கவனம் தப்பிய சுகம் 

இங்கு நம்மை சுமந்திருக்க 

சொத்தோட பொறந்த உனக்கு

பாவமா தான் பார்க்க தோணும் 

பாட்டன் விட்டு போனதெல்லாம் 

உன் உழைப்புன்னு சொல்ல தோணும் 

ஆட்டத்தின் விதிகள் 

நமக்கு வளையும் 

அது ஆற்றலின் விளைவில்லை

நமக்கும் தெரியும் 

கையில் கட்டும் கயிறின் வண்ணம் 

கைவண்ணம் காட்டாது 

தோளில் தொங்கும் நூலினாலே உன் 

தகுதி கூடாது 

இயற்கை உன் கட்டுக்கதைக்கு 

தலையை ஆட்டாது 

அதன் அலர்தலின் வழியே 

வீழ்ந்த வீம்பு பல நூறு 

உன் ஜாதித்தான் உன் தகராறு

இங்க வந்து நிக்குது வரலாறு

உன் முப்பாட்டனோட புகழின் நிழலில் நிக்குற

உன் கதை மட்டும்தான் உண்மைன்னு சாதிக்குற

ரௌத்திரம் ஓங்கியாச்சு…

Un Jaathi Dhaan Un Varalaaru

Anga Dhaan Nikkuthu Thagaraaru 

Yenna Yarukkum Varalaaru Theriyathu 

Varalaaril Suththa Unmaigal Kidaiyathu 

Un Muppaattan Dhaan Perum Pudungi 

Nee Verum Thodai Nadungi 

Avanum Kaththu Thandha Pala Nooru Vitha

Nee Verum Sillaraiyai Mattum Saekka Vitha 

Aathiram Pulicha Pinnae 

Aaraindhu Paarka Ponen 

Suyanalathai Odhukki Vechu 

Nidharsanathula Yugichen 

Aaru Yezhu Nyaya Manidhar 

Nejamaavae Othigai Paarthu 

En Yugam Saththiya Kathirin 

Nizhalunnu Oththukittu 

Parisodhanai Panni Dhaane 

En Yugam Unmaiyachu 

Un Vaadham Uththu Kaetta

Adukkaduka Purali Pechu 

Naan Puzhu-Unavaagi 

Kadandhu Ponapinnum 

Vittu Senra Unmaiyellam 

Thedum Torch Oliyil Minnum

Oru Velai En Kaalathil 

Oorukellam Buththi Mulaichu 

Aathiratha Adakki Vechu 

Oru Manamaai Unmai Thaedinaal 

En Kaalathin Unmaigal 

En Maiyil Ezhudhi Irukkum 

Ettiya Seviyengum 

Ul Aarachi Thuvangi Irukkum   

Oru Vaelai Naalai Namaku 

Indha Kelvikkum Badhil Kidaikkum 


Ennanaa

Rowthiram Ongiyaachu 

Kalaaichu Sirichaachu 

Kovama Pongiyaachu 

Yosikka Pazhagiyaacha

Rowthiram Ongiyaachu…

Rowthiram Ongiyaachu…

Irulil Thavikkirom Endru 

Thalaivanai Thedi Senru 

Moonu Adi Munne Paarka 

Evanumae Illai Endru 

Aangaaram Aarippoga 

Samathuvam Marandhu Poga 

Suttri Ulla Manidhar Ellam 

Thukkathil Soozhndhu Poga 

Ethirkaalathin Sarathiri 

Varalaarin Thee Pori 

Idaiye Oru Ottai Vaaliyil  

Needhi-Nadhi Neerai Kondu Naamum 

Parambara Perumaiyai 

Mike-a Pottu Kondaadurom 

Saerthu Vandha Paavathellam 

Semmaiya Pandhaadurom

Sogusula Valarndha Naama 

Salugaigal Vendaangurom 

Kanna Katti Kaadha Pothi 

Samudhaayam Samamgurom 

Nammoda Salugaigalo

Amaippil Olinthirukka 

Gavanam Thappiya Sugam 

Ingu Nammai Sumanthiruka 

Sothoda Porandha Unaku 

Paavama Dhaan Pakka Thonum 

Paattan Vittu Ponadhellam 

Un Uzhaippunu Solla Thonum 

Aattathin Vidhigal 

Namakku Valaiyum 

Adhu Aatralin Vilaivillai

Namakkum Theriyum 

Kaiyil Kattum Kayirin Vannam 

Kaivannam Kaataadhu 

Tholil Thongum Noolinaale Un 

Thaguthi Koodaathu 

Iyarkai Un Kattu Kadhaikku 

Thalaiyai Aatadhu 

Adhan Alarthalin Vazhiye 

Veezhndha Veembu Pala Nooru 

Un Jaathi Dhaan
Un Thagaraaru 

Inga Vandhu Nikkudhu
Varalaaru

Un Muppaattanoda Pugazhin Nizhalil Nikkura

Un Kadhai Mattum Dhaan Unmaiyinnu Saadhikkura

Rowthiram Ongiyaachu…