பதவியில் இருக்கும்
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
ஒரு அன்பார்ந்த வேண்டுகோள்
தயவு செய்து செவி சாய்க்கவும்
நன்றி
இது ஜனநாயகம்
உன் அரசியல் நாடகம்
பதவி ஏத்திவிட்டா
அற செயல் செய்யணும்
இது ஜன நாயகம்
மனதில் நினைவிருக்கட்டும்
நீ எங்கள் சேவகன்தான்
ஏன்னா நாங்க தான் ஜனம்
மொதல்ல ஓட்ட கேட்டு வட சுட்ட
மன்னிச்சோம்
பின்ன பதவில காச சுட்ட
சகிச்சோம்
நாங்கள் போராடினோம் ஆள சுட்ட
அவளோ நீ துணிஞ்சிட்ட
நீ அமர்வது நாற்காலி சிம்மாசனம் இல்ல
பொறுப்ப தான நாங்க தந்தோம் உன்ன மன்னன் ஆக்கல
எங்களுக்கு மாசான நீர் நிலம் காற்று வேண்டாம்
வணிகம் காசுன்னு நீ ரீல சுத்த வேண்டாம்
மொதல்ல நாங்க பேசவரும்போது காத குடுத்து கேளு
சும்மா போலீஸ் வெச்சு கைய ஓங்க நீங்க யாரு
கேள்வி கேட்டா முணுங்குற
உண்மையை நீ முழுங்குற
சட்டம் காக்க தானே நீங்க
அத ஏங்க மறந்தீங்க
இது ஜனநாயகம்…
தூத்துக்குடி மட்டும் இல்ல
உன் கூட்டு சதியின் இடம்
ஸ்டெர்லைட் மட்டும் இல்ல
உன் கூட்டாளியின் முகம்
எண்ணூருல்ல டெல்ட்டாவுல கூடங்குளத்திலயும்
வளர்ச்சினு சொல்லி கொள்ளை அடிக்கிற தினமும்
நீ கொள்ளை போக விடுறது
இயற்கை வளம்
சொரண்டிட்டா ஊரு வெறும்
வறண்ட நிலம்
வாழ்வாதாரம் அழிக்கிற
வாழ்வுதாரம் குறைக்கிற
எதிர்காலம் சிதைக்கிற
கேள்வி கேட்டா ஜெயில்ல அடைக்கிற
நீ சீன் போட்டா பயப்பட
தமிழன் நா கொக்கா?
மக்களாட்சி மறந்திட
மக்கள் என்ன மக்கா?
கம்பெனி முதலாளிட்ட
முடியாது சொல்லு
அராஜகம் நிறுத்தி
வந்து எங்க பக்கம் நில்லு
இது ஜனநாயகம்…
Pathaviyil Irukum
Anaithu Nallungalukum
Oru Anbaarntha Vendukol
Thayavu Seithu Sevi Saaikavum
Nandri
Idhu Jananaayagam
Un Arasiyal Naadagam
Padhavi Yethivitta
Ara Seyal Seiyanum
Idhu Jananaayagam
Manathil Ninaivu irukatum
Nee Engal Sevagan Thaan
Yenna Naanga Thaan Janam
Mothala Vote Kettu Vada Sutta
Mannichom
Pinna Padhavila Kaasa Sutta
Sagichom
Naanga Poraadinom Aala Sutta
Avalo Nee Thuninjitta
Huh?
Nee Amarvathu Naarkaali Simaasanam Illa
Poruppu Thaana Naanga Thaandhom Unna Mannan Aakala
Engalukku Maasaana Neer Nilam Kaattru Vendam
Vanigam Kaasunu Nee Reela Suththa Vendam
Mothala Naanga Pesavarum Bodhu Kaatha Kuduthu Kelu
Summa Police Vechu Kaiya Onga Neenga Yaaru
Kelvi Ketta munungura
Unmaiya Nee Muzhungura
Sattam kaaka thaane neenga
Atha Yenga Marantheenga
Idhu Jananaayagam…
Thoothukudi Mattum Illa
Un Kootu Sathiyin Idam
Sterlite Mattum Illa
Un Kootaaliyin Mugam
Ennorela Deltavula Koodankulathilayum
Valarchi-nu Solli Kolla Adikira Dhinamum
Nee Kolla Poga Vidurathu
Iyarkai Valam
Sorandita Ooru Verum
Varanda Nilam
Vaazhvaathaaram Azhikira
Vaazhvu Tharam Koraikira
Edhir Kaalam Sithaikira
Kelvi Ketta Jail-la Adaikura
Nee Scene Pota Bayapada
Thamizhan-na Kokka
Makkalaatchi Maranthida
Makkal Enna Makka
Company Mudhalaalita
Mudiyaathu Sollu
Araajagam Niruthi
Vandhu Enga Pakkam Nillu
Idhu Jananaayagam…