Nil. Gavani. Sol. Lyrics

Nil Gavani Sol

Nil Gavani Sol

Nil 

Gavani 

Sol

Thelivaaga Sol

Thayangaamal Sol

Thunivodu Sol 

Karunaiyaai Sol

Porumaiyaai Sol

Oru Vaarthai Vendam

Oru Sollil Sol

Mozhi Mogham Vendam

Porul Mattum Sol

Thodai Nadungiyum
Unmai Sol

Oor Odhukkiyum
Urakka Sol

Aga Manathinai

Veliye Sol

Pura Nilamaiyai

Ulle Sol

Unakke Porul Marakkum Varai

Meendum Meendum Meendum Sol

Paathaalathil Vizhunthum Ezhunthu

Meendu Vandhum Sol


Nil


Arasiyal Medai Pechu 

Kavingan Isai Veechu

Irandum Poi Endral 


Oor Aadi Vidum

Unmai Thoongi Vidum

Uranga Vidathe

Kathu

Un Moochu Kaatru Theerum Varai
Un Kaathil Paatu Ketkum Varai
Un Kaigal Thaalam Thattum Varai

Un Naavil Raagam Ettum Varai

Unakkul Ratham Odum Varai

Ull Pitham Theerum Varai
Mic Set Pottu

Thondai Kizhiya

Kathu

Ithu En Karuthu Endru Kathu

Mozhi Atravanukku Kuralaai Kathu

Adakkubavan Adhira Kathu

Adangiyavan Aada Kathu 

Maranthathai Ezhuppa Kathu

Maravathai Maatra Kathu

Naan Irukiren Naan Irukiren Enbatharkellam Kaththathe

Angirunthu Thaan Naam Anaivarum Thudanginom

Ithu Varaikkum Vanthathu Ingeye Vaazha Alla

Nam Payanam Thodarum Thalaraathe

Mayangaathe

Katrukol
Katrathai Marakka Katrukol

Maranthathai Pazhaga Katrukol

Pazhagiyathai Pagira Katrukol

Aasaanai Kelvi Ketka Katrukol
Maanavanin Maanavanaaga Katrukol

Ithu Ellam Unakku Pirapil Irundhe Theriyum Eninum

Ninaivu Paduthuvathu Kalaigna Dharmam

Marakka Mudiyatha Mei Balathaal

Thadukka Mudiyatha Santharpathil

Paarabatcham Paakamal

Puyal Pol Pesu

Un Sol Veesum Bothu
Athan Mel Mattum Thaan Gavanam
Nee Pesi Muditha Pinne

Aala Mounam 

Nil Gavani Sol

Nil Gavani Sol

Nil Gavani Sol

Nil 

Gavani 

Sol

Nil

நில் கவனி சொல்

நில் கவனி சொல்

நில்

கவனி

சொல்

தெளிவாக சொல் 

தயங்காமல் சொல் 

துணிவோடு சொல் 

கருணையாய் சொல் 

பொறுமையாய் சொல் 

ஓர் வார்த்தை வேண்டாம் 

ஒரு சொல்லில் சொல் 

மொழி மோகம் வேண்டாம் 

பொருள் மட்டும் சொல் 

தொடை நடுங்கியும் உண்மை சொல் 

ஊர் ஒதுக்கியும் உரக்கச் சொல் 

அக மனதினை வெளியே சொல் 

புற நிலைமையை உள்ளே சொல் 

உனக்கே பொருள் மறக்கும் வரை 

மீண்டும் மீண்டும் மீண்டும் சொல் 

பாதாளத்தில் விழுந்தும் எழுந்து மீண்டு வந்தும் சொல் 

நில் 

அரசியல் மேடை பேச்சு 

கவிஞன் இசை வீச்சு 

இரண்டும் பொய் என்றால் 

ஊர் ஆடிவிடும் 

உண்மை தூங்கி விடும் 

உறங்க விடாதே கத்து 

உன் மூச்சு காற்று தீரும் வரை

உன் காதில் பாட்டு கேட்கும் வரை 

உன் கைகள் தாளம் தட்டும் வரை 

உன் நாவில் ராகம் எட்டும் வரை 

உனக்குள் ரத்தம் ஓடும் வரை 

உள் பித்தம் தீரும் வரை

Mic Set போட்டு தொண்டை கிழிய கத்து

இது என் கருத்து என்று கத்து

மொழி அற்றவனுக்கு குரலாய் கத்து 

அடக்குபவன் அதிர கத்து 

அடங்கியவன் ஆட கத்து 

மறந்ததை எழுப்ப கத்து 

மறவதை மாற்ற கத்து 

நான் இருக்கிறேன் நான் இருக்கிறேன் 

என்பதற்கெல்லாம் கத்தாதே 

அங்கிருந்து தான் நாம் அனைவரும் தொடங்கினோம் 

இது வரைக்கும் வந்தது இங்கேயே வாழ அல்ல 

நம் பயணம் தொடரும் தளராதே மயங்காதே 

கற்றுக்கொள் கற்றதை மறக்க கற்றுக்கொள் 

மறந்ததை பழக கற்றுக்கொள் 

பழகியதை பகிர கற்றுக்கொள் 

ஆசானை கேள்வி கேட்க கற்றுக்கொள் 

மாணவனின் மாணவனாக கற்றுக்கொள்

இது எல்லாம் உனக்கு பிறப்பில் இருந்தே தெரியும் 

எனினும் நினைவு படுத்துவது கலைஞ தர்மம் 

மறக்க முடியாத மெய் பலத்தால் தடுக்க முடியாத சந்தர்ப்பத்தில் 

பாரபட்சம் பார்க்காமல் புயல் போல் பேசு 

உன் சொல் வீசும் போது அதன் மேல் மட்டும் தான் கவனம் 

நீ பேசி முடித்த பின்னே ஆழ மௌனம் 

நில் கவனி சொல்

நில் கவனி சொல்

நில் கவனி சொல்

நில்

கவனி

சொல்

நில்