Poromboke Song

வெள்ளம் வந்து போன பின்னே கத்துக்கிட்டது என்ன?

ஏரிக்குள்ள கட்டடத்தை கட்டுறது என்ன?

மழை தண்ணி கடலுக்கு வடியுற இடத்துல

கான்கிரீட் கட்டடம் தேவையா கண்ணு?

முன்னே நகரத்துக்குள்ள நதிகளும் ஓடல

நதி சுத்தி தான் நகரம் வளந்துச்சு

மழை தண்ணிய காத்த ஏரிக்கு 

பொறம்போக்குன்னு பேரு இருந்துச்சு

அட இயற்கையோட சட்டம் புரிஞ்சு 

பாட்டன் போட்ட திட்டம் அது 

மழை வந்தா ஏரிக்குளம் 

காஞ்சிருந்தா பொறம்போக்கு 

பொறம்போக்கு உனக்கு இல்ல

பொறம்போக்கு எனக்கு இல்ல

பொறம்போக்கு ஊருக்கு

பொறம்போக்கு பூமிக்கு

ஆமா பொறம்போக்கு உன் பொறுப்பு

பொறம்போக்கு என் பொறுப்பு

பொறம்போக்கு ஊர் பொறுப்பு

இயற்கைக்கு பூமிக்கு

ஆனா இப்போ ஏரி மதிக்காம நாம கண்டபடி விக்க

ஏரி பூரா ஒண்ணா கூடி கட்டிடமா நிக்க 

மழை வந்து பாதி ஊரை அடிச்சுட்டு போச்சு

வெள்ளம் வந்து பாக்கிய முடிச்சுட்டு போச்சு

அட இயற்கையோட திட்டம் எதிரே

மனுஷன் போட்ட சட்டம் என்ன

காத கிழிக்குற புயலுக்குள்ள 

பாதி கொலுசு சத்தம் தானே

வளர்ச்சி வேலை வாய்ப்பு எல்லாம் வெட்டி சாக்கு

ஏரி வித்தவனுக்கு ஏரி வெறும் பொறம்போக்கு

அட வளர்ச்சி வேலை வாய்ப்பு எல்லாம் இது வெட்டி சாக்கு

ஏரி வித்தவனுக்கு ஏரி வெறும் பொறம்போக்கு

அப்போ நீயும் நானும் என்ன கணக்கு?

அட நீயும் நானும் நீயும் நானும் 

நீயும் நானும் பொறம்போக்கு 

நன்னன்ன நன்னன்ன நான் பொறம்போக்கு 

நின்னின்னி  நின்னின்னி நீ பொறம்போக்கா?

நன்னன்ன நன்னன்ன நான் பொறம்போக்கு 

நின்னின்னி  நின்னின்னி நீ பொறம்போக்கா?

நன்னன்ன நன்னன்ன நான் பொறம்போக்கு 

நின்னின்னி  நின்னின்னி நீ பொறம்போக்கா?

Vellam Vandhu Pona Pinnae Kathukittadhu Enna

Aeri Kulla Kattadatha Katturadhu Enna

Mazhai Thanni Kadalukku Vadiyura Idathula

Concrete Kattadam Thevaiya Kannu 

Munnae Nagarathukulla Nadhigalum Odala

Nadhi Suthi Dhaan Nagaram Valandhuchu

Mazhai Thanniya Kaatha Aerikku 

Porambokkunu Paeru Irundhuchu

Ada Iyarkaiyoda Sattam Purinju 

Paattan Potta Thittam Adhu 

Mazhai Vandhaa Aeri Kulam

Kaanjirundha Porombokku

Porombokku Unnaku Illa

Porombokku Ennaku Illa

Porombokku Orukku

Porombokku Bhoomikku

Aamaa 

Porombokku Un Poruppu

Porombokku En Poruppu

Porombokku Oor Poruppu

Iyarkaikku Bhoomikku

Aana Ippo Aeri Madhikaama 

Namma Kandapadi Vikka

Aeri Poora Onna Koodi

Kattidama Nikka

Mazhai Vandhu Paadhi Oorai 

Adichutu Pochu

Vellam Vandhu Baakiya 

Mudichuttu Pochu

Ada Iyarkaiyoda Thittam Edhurae

Manushan Potta Sattam Enna

Kaadha Kizhikura Puyalukulla

Paadhi Kolusu Satham Dhaanae

Valarchi Vaelai Vaaipu Ellam Vetti Saaku

Aeri Vithavanakku Aeri Verum Porombokku

Ada Valarchi Vaelai Vaaipu Idhu Ellam Vetti Saaku

Aeri Vithavanakku Aeri Verum Porambokku

Appo Neeyum Naanum Enna Kanakku

Ada Neeyum Naanum Neeyum Naanum

Neeyum Naanum Porombokku

Nanana Nanana Naa Porombokku

Ninini Ninini Nee Porombokka?

Nanana Nanana Naa Porombokku

Ninini Ninini Nee Porombokka?

Nanana Nanana Naa Porambokku

Ninini Ninini Nee Porambokka?