Rendu Perum Lyrics

அவனுக்கு வண்டி ஓட்ட பயமா இருக்கு 

25
லைசென்ஸ் இன்னும் இல்ல 

அவளுக்கு 22 கழுத்துல தங்கத் தாலி 

வெளித் தோற்றத்தில் அப்பாவி 

ரெண்டு பேரும் பஸ் ஸ்டாண்டு-ல 

அப்பப்போ பார்த்துப்பாங்க 

பார்வையை மீறி ஒன்னும் இல்ல 

ஆனா அப்பப்போ பார்த்துப்பாங்க 

ரெண்டு பேரும் காலி பஸ்-ல ஜன்னல் சீட்-ல 

மட்டும் தான் ஏறுவாங்க

அட காலி பஸ்-ல ஜன்னல் சீட்-ல 

மட்டும் தான் ஏறுவாங்க 

அவனுக்கு சின்ன வயசுலேயே தலபோயி 

ஆகாயத்துல ஐக்கியம் ஆச்சு 

அதனால் நடக்கும் போது எல்லாம் 

முட்டி ரெண்டும் முட்டிக்கிச்சு 

அவளுக்கு அவ கருத்தை கேட்காமலேயே 

கல்யாணம் ஆச்சு 

இப்போ பேரக்குட்டி எங்கன்னு 

வீட்டுல பேச்சு ஆரம்பிச்சாச்சு

ரெண்டு பேரும் 

காலி பஸ்-ல ஜன்னல் சீட்-ல…

திராட்ச கொத்த போல 

புட்போர்டு-ல தொங்குற கூட்டம் 

பஸ் ஸ்டாண்டு பக்கம்  

தேங்குன சாக்கடை நாத்தம் 

காத்து கொஞ்சம் வேணுன்னா 

கொஞ்சம் காத்திருக்க வேணும் 

ரெண்டு பேரும் 

காலி பஸ்-ல ஜன்னல் சீட்-ல…

Avanukku vandi otta bayama iruku 

25
Licence innum illa 

Avalukku 22 kazhuthula thanga thaali 

Veli thottrathil appaavi

Rendu perum bus stand-la 

Appappo paarthupaanga

Paarvaiya meeri onnum illa

Aana appappo paarthupaanga

Rendu perum

Gaali bus-la jannal seat-la 

Mattum dhaan yeruvaanga

Ada

Gaali bus-la jannal seat-la 

Mattum dhaan yeruvaanga

Avanukku chinna vayasulaye

Thalapoyi aagayathula

Aikkiyam aachu

Adhanaal nadakkum podhu ellam 

Mutti rendum muttikichu

Avalukku ava karutha ketkaamalaye 

Kalyaanam aachu

Ippo paera kutti enganu 

Veetula pechu aarambichachu

Rendu perum

Gaali bus-la jannal seat-la… 

Dhraaksha kotha pola

Footboard-la thongura kootam

Bus stand-u pakkam

Thaengina saakada naatham

Kaathu konjam venumna 

Konjam kaathiruka venum

Rendu perum

Gaali bus-la jannal seat-la…