Saakin Pokku Lyrics

மலையின் முனையில் 

மனம் முணுமுணுங்க     

மிதக்க முடியாமல் 

மயக்கம் முடிந்தாலும்

வெள்ளை வானம்

வரவழைத்தாலும்

வீரம் வெறிகூடி 

விழி விரிந்தாலும்  

தலைக்குள் தாளம்

துள்ளி துடித்தாலும்

செவியில் சென்றகாலம் 

கத்திக் கூவினாலும்  

நான் நேராக நோக்கி

நகராமல் நிற்பேன் 

நிதானமாக நிம்மதி நிஜமாக

நேரம் நகர்ந்து நிழல்கள் நொறுங்கி 

ஒளிந்ததில் ஒளி

ஒளிவை ஒழித்து

ஓரமாய் ஒழுகி

இருளுக்கு இழிவென

இருட்டு இனமும் 

குருட்டு குணமும் 

சறுக்கும் சித்தாந்தமும் 

அழும் அலறல்

ஒலிக்க ஓடி 

நெகிழ்ச்சி நிரம்பி 

தெளிவு துளைத்த 

விளிம்பு வளர 

மனிதனாய் மாறுவேன்

இன்று இல்லை நாளை 

நான் மனிதனாய் மாறுவேன்

இன்று இல்லை

நாளை நான்

மனிதனாய் மாறுவேன்

இன்று இல்லை நாளை 

நான் மனிதனாய் மாறுவேன்

Malaiyin Munaiyil

Manam Munumununga

Midhakka Mudiyaamal

Mayakkam Mudindhaalum

Vellai Vaanam

Varavazhaithaalum

Veeram Verikoodi

Vizhi Virindhaalum

Thalaikul Thaalam

Thulli Thudithaalum

Seviyil Sendrakaalam

Kaththi Koovinaalum

Naan Neraga Nokki

Nagaraamal Nirpen

Nidhaanamaaga

Nimmathi Nijamaaga

Neram Nagarnthu

Nizhalgal Norungi

Olindhathil Oli 

Olivai Ozhithu

Oramaai Ozhugi

Irulukku Izhivenna

Iruttu Inamum 

Kuruttu Gunamum

Sarukkum Sithaandhamum

Azhum Alaral

Olikka Odi

Negizhchi Nirambi

Thelivu Thulaitha

Vilimbu Valara

Manithanaai Maaruven

Indru Illai Naalai Naan

Manithanaai Maaruven

Indru Illai Naalai Naan

Manithanaai Maaruven

Indru Illai Naalai Naan

Manithanaai Maaruven