Vasanam Lyrics

அவன் வசனம் வீசும்போது கண்ட நீ –

அவன் வரிகள் கற்கும்போது பார்த்தாயா? 

அவள் நடனம் ஆடும்போது கண்ட நீ –

அவள் தாளம் வேர்க்கும்போது பார்த்தாயா?

அவன் வசனம் வீசும்போது கண்ட நீ –

அவன் வரிகள் கற்கும்போது பார்த்தாயா? 

அவள் நடனம் ஆடும்போது கண்ட நீ –

அவள் தாளம் வேர்க்கும்போது பார்த்தாயா?

யாரோ எங்கோ சொன்ன கதையை 

நீயே உணர்ந்த உண்மை போலே

நேரம் கருதாமல் 

என்னிடம் சொன்னாய்

அரைகுறையாக தெரிந்தது என்பதை

முழுதும் அறிந்தே 

எல்லாம் புரிந்ததைபோல் 

நடந்துகொண்டாய் 

நீ நடிப்பது யார் பலனுக்கு? 

என்னிடம் பலிக்கவில்லை 

நீ நடிப்பதை நீயே நம்புவதுபோல் 

தெரியவில்லை 


நெஞ்சம் நிமிர்ந்து 

நேராக நின்று 

இதுதான் நான் என்று 

சொல்ல என்ன வெட்கமோ?

கூனி குறுகி 

கூட்டத்தில் கரைந்து 

நீ இல்லை என்று சாதிக்க 

ஏன் இந்த ஏக்கமோ? 

உலகை வெட்டி அட்டைபெட்டிக்குள் 

அடக்க பார்ப்பது ஏன்? 

நெஞ்சில் நியாயம் நிற்க 

சட்டம் நீதியை முறிப்பது ஏன்? – ஏன்?

பூமி பரந்திருக்கு 

வானம் விரிந்திருக்கு 

சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே 

காலம் கடல்போல் கிடக்கு 

அதில் நீந்ததானே நேரமே இல்லை நமக்கு  

அவன் வசனம் வீசும்போது கண்ட நீ…

Avan Vasanam Veesumbodhu Kanda Nee
Avan Varigal Karkumbothu Paarthaaya?

Aval Nadanam Aadumbothu Kanda Nee
Aval Thaalam Verkumbodhu Paarthaaya?

Avan Vasanam Veesumbodhu Kanda Nee
Avan Varigal Karkumbothu Paarthaaya?

Aval Nadanam Aadumbothu Kanda Nee
Aval Thaalam Verkumbodhu Paarthaaya?

Yaaro Engo Sonna Kadhayai 

Neeye Unarntha Unmai Pole

Neram Karuthaamal 

Ennidam Sonnai

Araikuraiyaga Therindhathu Enbathai

Muzhuthum Arindhe

Ellam Purinthathaipol 

Nadanthukondai

Nee Nadippathu Yaar Palanuku

Ennidam Palikkavillai

Nee Nadipathai Neeye Nambuvathu Pol 

Theriyavillai

Nenjam Nimirnthu

Neraaga Nindru 

Idhuthaan Naan Endru 

Solla Enna Vekkamo

Kooni Kurugi 

Koottathil Karainthu 

Nee Illai Endru Sathikka 

Yen Intha Yekkamo? 

Ulagai Vetti Attaipettikkul

Adakka Paarpathu Yen? 

Nenjil Nyayam Nirkka 

Sattam Neethiyai Murippathu Yen – Yen?

Bhoomi Paranthirukku

Vaanam Virinthirukku 

Sinthanaikum Seyalukkum Idaiye

Kaalam Kadal Pol Kidakku

Athil Neenthathaane Nerame Illai Namakku
Avan Vasanam Veesumbodhu Kanda Nee…