← All lyrics
Anbe Nalama? by Kaber Vasuki cover art

Anbe Nalama?

Single • 2019

இரண்டு கண்டம் நம்மைப் பிரிக்குதடி
ஆழக்கடலும் சிரிக்குதடி
வானம் நீண்டு கிடக்குதடி
நேரம் குடிச்சு நடக்குதடி
உன் முத்தம் வாசம் அணைப்பு நிதம்
மூன்றும் தான் என் உச்சிச் சுகம்
கட்டிப் பிடிக்க ஒட்டி உரச
இன்பக் களத்தில்
உன்னுடன் நான் பிணைந்திணைய
அன்பே நான் இங்கே
நலம் தான்; நலம் தான்; நலம் தான்;
அன்பே நீ அங்கே
நலமா? நலமா? நலமா?
அன்பே நான் இங்கே
நலம் தான்..
உன் பக்கம் நான் இருந்தா உயருறேன்
உன் காலம் நான் பகிர்ந்தா சீராகுறேன்
உன்னோடு நடக்கும் போது நேராகுறேன்
தூரத்தால் அப்பப்போ நான் தூளாகுறேன்
உன் வாழ்வில் நான் நுழைய காத்திருக்கேன்
கனவில் உன்னை நான் சேர்த்துருக்கேன்
மாறாமலே நான் ஏங்கி நிக்க
என் ஆசை என் மேலே இறக்கி வச்சேன்
உன் பேச்சு பார்வை எண்ண களம்
அனைத்தும் இதய இதத்தைத் தரும்
கட்டிப் பிடிக்க ஒட்டி உரச
இன்ப களத்தில்
உன்னுடன் நான் பிணைந்திணைய
அன்பே நான் இங்கே
நலம் தான்...
அன்பே நான் இங்கே
நலம் தான்...