← All lyrics
Aazhmanam by Kaber Vasuki cover art

Aazhmanam

Single • 2022

நிபந்தனையின்றி அன்பு அம்மா தந்தா
அது தன்னம்பிக்கை ஆகுதே
அன்பைக்காட்ட நிபந்தனை வைத்தால்
சுயவெறுப்பா போகுதே
கூட நின்று அப்பா தட்டித் தந்தா
அது வீரமா மாறுதே
தூரம் நின்று கட்டளையிட்டால்
மனமும் தாழ்ந்துப் போகுதே
ஐந்தில் வளையாததை
ஐம்பதில் வளைக்கலாம்
இயலாது என்பது வெறும் பேய் கதை
ஆழ்மனம் போர்க்களம்
நீயும் வீரன்தான்
நீயும் வீரன்தான்
உங்கம்மா உன்ன அடிமைப் போல நடத்தினா
எஜமான தானே நீயும் தேடுவ
தலைக்கு மேலே தூக்கிக் கொண்டாடினா
ஒரு அடிமையத் தான் நீயும் நடுவே
உங்கப்பா உன்ன கேட்ட கேள்வியெல்லாம்
நீ உலகத்தைப் பார்த்து கூவுற
உங்கப்பா உனக்கு செஞ்ச பாவமெல்லாம்
நீ சிலுவைப்போல மரணம் வரை ஏந்துவ
ஐந்தில் வளையாததை
ஐம்பதில் வளைக்கலாம்
இயலாது என்பது வெறும் பேய் கதை
ஆழ்மனம் போர்க்களம்
நீயும் வீரன்தான்
நீயும் வீரன்தான்
குற்றம் உனதில்லை எல்லாம் சாமி செய்த பாவம்
பற்றும் தேவையில்லை எல்லாம் அன்பைக் கண்டால் ஆறும்
பிறர் அன்பும் தேவையில்லை
உன் அன்பே உனக்குப் போதும் போதும்
உலகின் பாரங்கள் உனதில்லை இறக்கிவை
புரட்சிகள் துவங்கும் முன் படுத்தப்பாயைச் சுருட்டி வை
ஆழ்மனம் போர்க்களம்
நீயும் வீரன்தான்
நீயும் வீரன்தான்