← All lyrics
Aramum Soodhum by Kaber Vasuki cover art

Aramum Soodhum

Single • 2022

சூதறியாதவர் சுயமறியார் சுயமறியாதவர் பயமறியார்
பயமறியாதவர் வீரர் எனப் போற்றும்கூட்டம் பகையறியார்.
பகையறியார் தன்ரகம் அறியார்
தன்ரகம் அறியாதவர் அறம் அறியார்
அறம் அறியாரின் விழுமங்கள் விற்கும்விலைகள் எவர் அறியார்.
சூதைக் கண்டு முகம் சுழித்தால் சூழ்ச்சிகள் உன்னைவெல்லும்
அறத்தைக் குறைத்து இடைக் கணித்தால் சாட்சிகள் உன்னைக் கொல்லும்
அறமோ சூதோ சூழலுக்குப் பொருந்தாட்டி பாவம்
நிலவைக் கண்டுக் குரைத்த நரிக்கு என்னலாபம்
அறமும் சூதும் எதிர்ப்பொருளாம்
அறமும் சூதும் எரிபொருளாம்
அறமும் சூதும் இருபொருளாம்
இயங்கும் அகத்தின் கருப்பொருளாம்
அண்டம் திரட்டும் காலத்துக்கோ கருப்பொருளெல்லாம் களிப்பொருளாம்
கதிர்ச் சுற்றுலா முடிந்த பின், வெப்பம் ஆறித் தனிந்தபின்
துடித்த இதயம் புழுவுனவாம் ஓங்கிய கரமும் பூவுரமாம்
சூதறியாதவர்...