← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

David Foster Wallace

Kurangan Era • 2019

ரெண்டு குட்டி மீன்கள்
மெல்ல நீந்தி போச்சாம்
தாத்தா ஆமை ஒன்னு
மீன ரெண்டும் தாண்டி போச்சாம்
அப்போ தாத்தா ஆமை
மீன்கள் கிட்ட கேட்டுச்சாம்
தண்ணி எப்படி எப்படி
தண்ணி எப்படி இருக்குன்னு..
தம்பி மீனும் அண்ணன்
மீனத்தான் பாத்து
தண்ணியினா என்ன
அப்படின்னு கேட்க
அண்ணன் மீனும் தம்பி
மீனதான் பாத்து
எனக்கென்னத் தெரியும்
அப்படின்னு சொல்ல
டேவிட் ஃபாஸ்டர் வாலஸ்
சொன்ன கதை இது
உத்து கேட்டீனா
உண்மை இருக்குது
டேவிட் ஃபாஸ்டர் வாலஸ்
சொன்ன கதை இது
நானும் வாழ வாழ
நல்லா புரியுது
பஸ்ஸுக்குள்ள பாத்தா
கூட்டம் அலைமோதும்
எல்லார் தலையிலும்
ஒரு படம் ஓடும்
பொக்க வாயும் சரி
மொக்க நாயும் சரி
அவன் அவன் படத்துல
அவன்தான் தெறி
யாராச்சும் கால மிதிச்சா
அவன வெட்ட தோணும்
அவனும் கூட்டத்துல சிக்கி இருக்கான்
மறந்து போகும்
நல்லா வாழ்ந்தவனுக்கு
வாழ்ந்தது படமா ஓடும்
வாழ காத்திருந்தா
கடிகாரம் கிர்ருனு ஓடும்
நிகழும் நொடி மட்டும்
எந்தப் படத்திலும் ஓடாது
இந்த நொடி மட்டும்
கணக்குல சேராது
இப்போ புரியுது
இப்போ புரியுது
இப்போ புரியுது
ஹே ஹே ஹே
தண்ணி இதுதான் தண்ணி இதுதான் தண்ணி
இதுதான் இதுதான் இதுதான் தண்ணி
தண்ணி இதுதான் தண்ணி இதுதான்
இந்த நொடிதான் இதுதான் இதுதான் தண்ணி
தண்ணி இதுதான் தண்ணி…
தண்ணி இதுதான் தண்ணி…
தண்ணி இதுதான் தண்ணி…
டேவிட் ஃபாஸ்டர் வாலஸ்
சொன்னக் கதை இது…