← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Rendu Perum

Kurangan Era • 2019

அவனுக்கு வண்டி ஓட்ட பயமா இருக்கு 25
லைசென்ஸ் இன்னும் இல்ல
அவளுக்கு 22 கழுத்துல தங்கத் தாலி
வெளித் தோற்றத்தில் அப்பாவி
ரெண்டு பேரும் பஸ் ஸ்டாண்டு-ல
அப்பப்போ பார்த்துப்பாங்க
பார்வையை மீறி ஒன்னும் இல்ல
ஆனா அப்பப்போ பார்த்துப்பாங்க
ரெண்டு பேரும் காலி பஸ்ஸுல ஜன்னல் சீட்டுல
மட்டும் தான் ஏறுவாங்க
அட காலி பஸ்ஸுல ஜன்னல் சீட்டுல
மட்டும் தான் ஏறுவாங்க
அவனுக்குச் சின்ன வயசுலேயே தலபோயி
ஆகாயத்துல ஐக்கியம் ஆச்சு
அதனால் நடக்கும் போது எல்லாம்
முட்டி ரெண்டும் முட்டிக்கிச்சு
அவளுக்கு அவ கருத்தைக் கேட்காமலேயே
கல்யாணம் ஆச்சு
இப்போ பேரக்குட்டி எங்கன்னு
வீட்டுல பேச்சு ஆரம்பிச்சாச்சு
ரெண்டு பேரும்
காலி பஸ்ஸுல ஜன்னல் சீட்டுல...
திராட்ச கொத்தப் போல
ஃபுட்போர்டு-ல தொங்குற கூட்டம்
பஸ் ஸ்டாண்டு பக்கம்
தேங்குன சாக்கடை நாத்தம்
காத்துக் கொஞ்சம் வேணுன்னா
கொஞ்சம் காத்திருக்க வேணும்
ரெண்டு பேரும்
காலி பஸ்ஸுல ஜன்னல் சீட்டுல...