← Raw Tapes 01
Raw Tapes 01 by Kaber Vasuki cover art

Frangipani

Raw Tapes 01 • 2025

என் ப்ரெண்டு பேரு நிலா
வேல முடிச்சுட்டு போவோம் உலா
விட்டு கொடுக்காத ஜூலை வெட்கையில
அன் டைம்ல ஆழ்வார்பேட்டையில
திடுதிப்புனு கூலா
ஒரு காத்து வீசிச்செங்க மேல
அந்த காத்துல குண்டு மல்லி வாசம்
அவ கொழந்த போல சிரிச்சா
இரண்டாயிரத்தி பதிமூணு
நினைவிருக்கு அன்னைக்கு ஃபுல் மூணு
தெருவிளக்கு வெளிச்சத்துல
மிதந்து வந்த பூவ பிடிச்சா
இந்த பூ இந்த பூ பேர் ஃபிரங்கிபானி
இத பாக்கும் போது
என்ன நெனச்சுபியானி னு கேட்டா
இந்த பூ இந்த பூ பேர் ஃபிராங்கிபானி
இத பாக்கும் போது
என்ன நெனச்சுபியா நீ
அப்பப்போ நிலா காணாம போவா சில
நாளாகும் வாரமாகும்
சிலசமயம் மாசமாகும்
கால் பண்ணா ஃபோன் சுவிட்ச் ஆஃப்
டெக்ஸ்ட் பண்ணி பாத்தா நோ டிக் மார்க்
மச்சா நிலா எங்கிருக்கா
எனக்கும் தெரியல யார்க்கும் தெரியல
தேய்பிறையில் மறையும் நிலவு
வளர்பிறை வலம் வருவதை போலே
திடீர்னு கால் பண்ணா ஃபோன் எடுத்தேன்
ஹாய் திஸ் இஸ் நிலா
வா கேபர் பீச்சுக்கு போலாம்
தெருநாய்கெல்லாம் பிஸ்கட் போட
உன் சட்ட கிளிஞ்சுருக்கு
புது சட்ட நா வாங்கி தாரேன்
என்னமா பாடுற நீ ஹையோ
மெய் சிலிர்த்தே போனேன்
நீ மேடை ஏறும்போது
முதல் வரிசையில் வந்து நிப்பேன்
அது இருக்கட்டும் நிலா
எங்க போன இத்தன நாளா
உன்ன எல்லாரும் தேடி பாத்தோமே
ஆனாலும் தெரியல
அது ஒன்னு இல்ல விளையாட்டா
நா சுத்தி பாக்க போனேன் கல்கட்டா
நன் ஆலாம்னு ட்ரை பண்ணேன்
பட் செட் ஆலனு சிரிச்சுட்டா ஹே
இரண்டாயிரத்தி பதிமூணு
நினைவிருக்கு அன்னைக்கு ஃபுல் மூணு
மார்கழி மழையில் பஸ் ஸ்டாண்ட் கொடையில்
கையில் ஏதோ தந்தா
இந்த கொக்கு இந்த கொக்கு பேரு ஓரிகாமி
இத பாக்கும்போது
என்ன நெனச்சுப்பியா நீ னு கேட்டா
இந்த கொக்கு இந்த கொக்கு பேரு ஓரிகாமி
இத பாக்கும்போது
என்ன நெனச்சுப்பியா நீ
காலம் மாறி போச்சு
நானும் ஊரு மாறி போனேன்
நாங்க பேசுறது கம்மியாச்சு
மெதுவா மெதுவா
ஆடி அம்மாவாச
கால் பண்ணி கதைகள் பேச
நா என் கதைய சொல்வேன்
அவ அவத சொல்வா
நாளைக்கு பேசலானு
ரெண்டு பேரும் சொல்லிவெப்போம்
அடுத்த நாள் ரெண்டு பேரும்
மறந்தே போவோம்
ஆனா பழைய நட்பு
காஞ்ச சனல போல
ஒரு பொறி பட்டாலே
பத்திக்கும் அல்லவா
திடீர்னு ஒரு நாள்
அன் டைம் ல
ஒரு கால்
யார்றானு பாத்தா
அப்துல்லா
என்ன மச்சா எப்படி இருக்க
மச்சான் தகவல் சொல்ல கூப்டேன்
என்ன மச்சான் என்ன தகவல்
மச்சான் நிலா
நிலாக்கு என்னடா?
நைட்டொரு பத்தரை இருக்கும்
பக்கத்து வீட்டு ஆண்டிக்கு கேட்டுச்சு சத்தம்
என்னடா னு வெளிய வந்தா
பார்க்கிங்லாட்டில் ஒளி வட்டம்
அந்த வட்டத்துக்குள் மிதந்திருந்தா நிலா
ரெக்க விரிச்சு பறந்து போனா நிலா
நைட்டொரு பத்தரை இருக்கும்
பக்கத்து வீட்டு ஆண்டிக்கு கேட்டுச்சு சத்தம்
என்னடா னு வெளிய வந்தா
பார்க்கிங்லாட்டில் ஒளி வட்டம்
அந்த வட்டத்துக்குள் மிதந்திருந்தா நிலா
ரெக்க விரிச்சு பறந்து போனா நிலா
முதல்ல உணர்ந்தேன் துரோகம்
எப்படி அவ பறக்கலாம்
பின்னே வந்துச்சு கோவம்
எப்படி அவ பறக்கலாம்
மெல்ல ஊறுச்சு சோகம்
எப்படி அவ பறக்கலாம்
இப்போ சுமக்குறேன் பாரம்
எப்படி அவ பறக்கலாம்
முதல்ல உணர்ந்தேன் துரோகம்
எப்படி அவ குதிக்கலாம்
பின்னே வந்துச்சு கோவம்
எப்படி அவ குதிக்கலாம்
மெல்ல ஊறுச்சு சோகம்
எப்படி அவ குதிக்கலாம்
இப்போ சுமக்குறேன் பாரம்
எப்படி அவ குதிக்கலாம்
எத்தன பேர் கனவுக்கு
அவள் வழிக்காட்டிய ஒரு கரைவிளக்கு
எத்தனை பேர் உறவுக்கு
அவள் தீபம் தெளித்த அகல்விளக்கு
அவள் ஒன்னும் புனிதமில்ல
அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல
இருள் வாழும் மனிதனுக்கோ
அவள் போலே ஒளிதர ஆளே இல்ல
நிலா நா மேடை ஏறினா
பாட்டு பாடினா வரேனியே
நிலா நா தேடிப் பார்க்குறேன்
தேடிப் பார்க்குறேன் தெரில்லயே
நிலா நா மேடை ஏறினா
பாட்டு பாடினா வரேனியே
நிலா நா தேடிப் பார்க்குறேன்
தேடிப் பார்க்குறேன் தெரில்லயே
நிலா நா மேடை ஏறுறே
பாட்டு பாடுறே கேக்குதா
நிலா உன் முகத்த தேடி
தேடி பார்க்குறேன் தெரியுதா
நிலா நான் மேடை ஏறியும் பாட்டு பாடியும் பார்த்தனே
நீ தானு கண் இமைப்பதுக்குள் நீ மறைச்சு போனியே
நீ ஒரு கனவு கொண்டா
இந்த ஊருக்கு எடுத்துட்டு வந்தா
தனியா இருப்ப இரவில் நிலவ போயிப்பாரு
அவட்ட உன் ஆச சொல்லு
அவட்ட உன் கனவ கேளு
உன்ன காத்து இருப்பா
காத்திருப்பா நிலா
எத்தன பேர் கனவுக்கு
அவள் வழிக்காட்டிய ஒரு கரைவிளக்கு
எத்தனை பேர் உறவுக்கு
அவள் தீபம் தெளித்த அகல்விளக்கு
அவள் ஒன்னும் புனிதமில்ல
அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல
இருள் வாழும் மனிதனுக்கோ
அவள் போலே இதம்தர ஆளே இல்ல
நிலா நிலா நீ ஓடி வா நில்லாமல் என்னை தேடிவா
நிலா நிலா நீ ஓடி வா நில்லாமல் என்னை தேடிவா
நிலா நிலா நீ ஓடி வா நில்லாமல் என்னை தேடிவா
நிலா நிலா நீ ஓடி வா நில்லாமல் என்னை தேடிவா
ப்ரெண்ட் பேரு நிலா
வேல முடிச்சுட்டு போவோம் உலா
விட்டு குடுக்காத ஜூலை வெட்கையில
அன் டைம் ல ஆழ்வார்பேட்டையில
திடுதிப்புனு கூலா
ஒரு காத்து வீசுச்சு எங்கமேல
அந்த காத்துல குண்டு மல்லி வாசம்
அவ கொழந்த போல சிரிச்சா
இரண்டாயிரத்தி பதிமூணு
நினைவிருக்கு அன்னைக்கு ஃபுல் மூணு
தெருவிளக்கு வெளிச்சத்துல
மிதந்து வந்த பூவ பிடிச்சா
இந்த பூ இந்த பூ பேரு ஃபிரங்கிபானி
இத பாக்கும் போது
என்ன நெனச்சுபியானி னு கேட்டா
இந்த பூ இந்த பூ பேரு ஃபிரங்கிபானி
இத பாக்கும் போது
என்ன நெனச்சுபியானி