← Raw Tapes 01
Raw Tapes 01 by Kaber Vasuki cover art

Oozhi

Raw Tapes 01 • 2025

இரவிருக்கு நிலவிருக்கு
நிலவொளியில் உன் முகத்தில்
புதிதாய் ஒரு பொலிவிருக்கு
அந்தப் பொலிவில் உன் சிரிப்பால்
எனக்குள் ஒரு அதிர்விருக்கு
அந்த அதிர்வின் அலைகளின் மேல்
நமக்கும் ஒரு படகிருக்கு
அந்தப் படகில் ஏறி
நாம் நிலவுக்கு செல்வோமா
நிலவில் அமர்ந்து
நம் கதைகள் சொல்வோமா
இதழ்கள் இணைத்தால்
இறுக்கி அணைத்தால்
நம் இளமையை இழுக்க இயலுமா
உன் வாசம் பரவசம் எனக்கு
உன் சுவாசம் பரசவம் எனக்கு
உன் நேசம் பரசவம் எனக்கு
என் இதயம் உன் வசம் இருக்கு
அதைத் தூக்கி வீசாதே
போட்டு மிதிக்காதே
தூளாக்கி ஊதாதே
காற்றிலே
என்னைத் தடுக்காதே
உன் ஆசை நிறுத்தாதே
இந்நொடி நிலைக்காதே
காதலே
நான் ஊழி ஊழி
ஊழி ஊழியாக
காத்திருந்தேன்
உனக்காக
நான் ஆழி ஆழி
ஆழி ஆழி போல
கரைமோதினேன்
எட்டா நிலவுக்காக…