← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Nee vekkam Kori

Kurangan Era • 2019

நீ வெட்கம் கோரி
பேசாத உண்மைகள்
நான் மேடை ஏறி
பாட வந்தேன்
நீ ஆசைக் கொண்டு
சேர்த்து வைத்த பொய்களை
நீ தூங்கும் போதே
திருடிச் சென்றேன்
உண்மைச் சொன்னால் வலிக்கும் ஆனால்
காலம் வலியைத் தணிக்கும்
பொய்கள் சொன்னால் இனிக்கும் ஆனால்
காலம் உறவை முறிக்கும்
நீ வெட்கம் கோரி...
என்ன கேலி வந்துச் சேரும் என்று,
நான் உணர்ந்ததை நானே மறுத்ததுண்டு
நான் பேசி என்னவாகும் என்று
கையைக் கட்டி நின்றதும் நினைவில் உண்டு
ஆனால் மிஞ்சிப் போனால் மரணம் என்ற போது
வாழ்க்கை வாழ வெட்கப்படலாமா
என்னை நானே மறுத்துக்கொண்டே
மரணம் வரைப் போகலாமா
நீ வெட்கம் கோரி...