← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Nil Gavani Sol

Kurangan Era • 2019

நில் கவனி சொல்
நில் கவனி சொல்
நில்
கவனி
சொல்
தெளிவாக சொல்
தயங்காமல் சொல்
துணிவோடு சொல்
கருணையாய் சொல்
பொறுமையாய் சொல்
ஒரு வார்த்தை வேண்டாம்
ஒரு சொல்லில் சொல்
மொழி மோகம் வேண்டாம்
பொருள் மட்டும் சொல்
தொடை நடுங்கியும் உண்மைச் சொல்
ஊர் ஒதுக்கியும் உரக்கச் சொல்
அகமனதினை வெளியே சொல்
புற நிலைமையை உள்ளே சொல்
உனக்கே பொருள் மறக்கும் வரை
மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்
பாதாளத்தில் விழுந்தும் எழுந்து மீண்டு வந்தும் சொல்
நில்
அரசியல் மேடைப் பேச்சு
கவிஞன் இசை வீச்சு
இரண்டும் பொய் என்றால்
ஊர் ஆடிவிடும்
உண்மைத் தூங்கி விடும்
உறங்க விடாதே கத்து
உன் மூச்சுக் காற்றுத் தீரும் வரை
உன் காதில் பாட்டுக் கேட்கும் வரை
உன் கைகள் தாளம் தட்டும் வரை
உன் நாவில் ராகம் எட்டும் வரை
உனக்குள் ரத்தம் ஓடும் வரை
உள் பித்தம் தீரும் வரை
மைக்-செட் போட்டுத் தொண்டைக் கிழிய கத்து
இது என் கருத்து என்று கத்து
மொழி அற்றவனுக்குக் குரலாய் கத்து
அடக்குபவன் அதிர கத்து
அடங்கியவன் ஆட கத்து
மறந்ததை எழுப்ப கத்து
மறவதை மாற்ற கத்து
நான் இருக்கிறேன் நான் இருக்கிறேன்
என்பதற்கெல்லாம் கத்தாதே
அங்கிருந்து தான் நாம் அனைவரும் தொடங்கினோம்
இது வரைக்கும் வந்தது இங்கேயே வாழ அல்ல
நம் பயணம் தொடரும் தளராதே மயங்காதே
கற்றுக்கொள் கற்றதை மறக்க கற்றுக்கொள்
மறந்ததைப் பழக கற்றுக்கொள்
பழகியதைப் பகிர கற்றுக்கொள்
ஆசானைக் கேள்விக் கேட்கக் கற்றுக்கொள்
மாணவனின் மாணவனாக கற்றுக்கொள்
இது எல்லாம் உனக்கு பிறப்பில் இருந்தே தெரியும்
எனினும் நினைவுப் படுத்துவது கலைஞத் தர்மம்
மறக்க முடியாத மெய்ப் பலத்தால் தடுக்க முடியாத சந்தர்ப்பத்தில்
பாரபட்சம் பார்க்காமல் புயல் போல் பேசு
உன் சொல் வீசும் போது அதன் மேல் மட்டும் தான் கவனம்
நீ பேசி முடித்தப் பின்னே ஆழ மௌனம்
நில் கவனி சொல்
நில் கவனி சொல்
நில் கவனி சொல்
நில் கவனி சொல்