← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Saakkin Pokku

Kurangan Era • 2019

மலையின் முனையில்
மனம் முணுமுணுங்க
மிதக்க முடியாமல்
மயக்கம் முடிந்தாலும்
வெள்ளை வானம்
வரவழைத்தாலும்
வீரம் வெறிக்கூடி
விழி விரிந்தாலும்
தலைக்குள் தாளம்
துள்ளித் துடித்தாலும்
செவியில் சென்றகாலம்
கத்திக் கூவினாலும்
நான் நேராக நோக்கி
நகராமல் நிற்பேன்
நிதானமாக நிம்மதி நிஜமாக
நேரம் நகர்ந்து நிழல்கள் நொறுங்கி
ஒளிந்ததில் ஒளி
ஒளிவை ஒழித்து
ஓரமாய் ஒழுகி
இருளுக்கு இழிவென
இருட்டு இனமும்
குருட்டுக் குணமும்
சறுக்கும் சித்தாந்தமும்
அழும் அலறல்
ஒலிக்க ஓடி
நெகிழ்ச்சி நிரம்பி
தெளிவுத் துளைத்த
விளிம்பு வளர
மனிதனாய் மாறுவேன்
இன்று இல்லை நாளை
நான் மனிதனாய் மாறுவேன்
இன்று இல்லை
நாளை நான்
மனிதனாய் மாறுவேன்
இன்று இல்லை நாளை
நான் மனிதனாய் மாறுவேன்.