← All lyrics
Poi by Kaber Vasuki cover art

Poi

Single • 2023

இது தொடங்கும் போது நானும் அப்பாவிதான்
ஏதும் அறியாமலே கேட்டத நம்பும் பேபிதான்
அந்த புனிதக் காலத்தில் பேராச தோணல
பொறாம புறணி பேச்சு ஏதும் மனசுல வாழல ஆனா
சரித்திரம் சுடுகாடு மனசு இருண்டு நாளாச்சி
சூதே அறியாமலே இங்க எந்த கட்டையும் வேகாது
மனசாட்சி தூங்க வைக்க ஆரா ரீரோ பாடட்டா
அப்பாவி வேஷத்துக்கு முகமூடிய தாரட்டா
புலிக்கு மரத்துல பலிக்கட்டு
எலிக்கு கூண்டுல வட வெட்டு
மீனுக்கு தூண்டிலில் புழு வைய்யி
மனுசனுக்கு போதும் ஒரு பொய்
பொய், பொய், பொய், பொய்,
பொய்,பொய், பொய், பொய்...
முட்டாள நம்பினேன் என் மூல மழுங்கிப் போச்சு
திருடன நம்பினேன் என் நேரம் களவுப் போச்சு
அதிகாரம் தேடும் கண்கள் அடிமையாத்தா பார்க்காத
லாபத்த சேர்க்கும் கைகள் கருவியாதான் ஆகாத
திசை இன்றி திரியும் நெஞ்சம் அடிமையாகி போகாதா
அன்புக்கு கெஞ்சும் உள்ளம் கருவியாதான் மாறாதா
பொய் பிம்பம் தரும் ஆறுதல் இன்பம் இன்பம் இன்பம் ஓஓஓ
புலிக்கு மரத்துல பலிக்கட்டு
எலிக்கு கூண்டுல வட வெட்டு
மீனுக்கு தூண்டிலில் புழு வைய்யி
மனுசனுக்கு போதும் வெறும் பொய்யு
பொய், பொய், பொய், பொய்,
பொய்,பொய், பொய், பொய்...