← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Rockstar

Kurangan Era • 2019

ஆளு கொஞ்சம் அப்படி இப்படி
சரியான சோம்பேறி
ஆனா வேல பண்ண ஆரம்பிச்ச
அவர போல யாரும் இல்ல
ஆளு கொஞ்சம் மக்குத்தான்
இருந்தாலும் கொக்குதான்
திடீருனு ஒரு நாள்
அடிச்சுது லக்குதான்
காசுக்காக வேல பண்ணல
வீட்டுக்காக வேல பண்ணல
மனசுக்குப் பிடிச்சத
திரும்பித் திரும்பிப் பண்ணப்பல
இப்போ பாரு
இப்போ பாரு
ஹே இப்போ பாரு
இப்போ பாரு
ஊரு பூரா பறக்குது அண்ணன் காரு
அண்ணன் தான ராக்ஸ்டாரு
ஊரு பூரா பறக்குது அண்ணன் காரு..
சுக்கிரன் சூட்டுல முத்தம் கொடுத்தா
இப்படித்தான் இருக்குமா
சுக்கிரன் சூட்டுல முத்தம் கொடுத்தா
இப்படித்தான் இனிக்குமா
சுக்கிரன் சூட்டுல முத்தம் கொடுத்தா..
பதினாறு வயசுல மதிக்காத பொண்ணு
இப்போ புள்ள குட்டிப் பெத்துக்கிட்டு
டிவில பாக்குது
பதினெட்டு வயசுல திட்டின வாத்தியாரு
போன் பண்ணி
தம்பி நல்லா இருக்கியா
கேட்குறாரு
ஆன் ஆன் தல கனக்குது
ஹோ ஹோ கால் மிதக்குது
ஹே ஹே சுதி துடிக்குது
அண்ணனுக்குத் தடையே இல்ல
ஊருப் பூரா பறக்குது அண்ணன் காரு…
சுக்கிரன் சூத்துல முத்தம் கொடுத்தா…