← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Poramboke Song

Kurangan Era • 2019

வெள்ளம் வந்து போன பின்னே கத்துக்கிட்டது என்ன?
ஏரிக்குள்ள கட்டடத்தைக் கட்டுறது என்ன?
மழைத் தண்ணிக் கடலுக்கு வடியுற இடத்துல
கான்கிரீட் கட்டடம் தேவையா கண்ணு?
முன்னே நகரத்துக்குள்ள நதிகளும் ஓடல
நதிச் சுத்தி தான் நகரம் வளந்துச்சு
மழைத் தண்ணியக் காத்த ஏரிக்கு
பொறம்போக்குன்னு பேரு இருந்துச்சு
அட இயற்கையோட சட்டம் புரிஞ்சு
பாட்டன் போட்டத் திட்டம் அது
மழை வந்தா ஏரிக்குளம்
காஞ்சிருந்தா பொறம்போக்கு
பொறம்போக்கு உனக்கு இல்ல
பொறம்போக்கு எனக்கு இல்ல
பொறம்போக்கு ஊருக்கு
பொறம்போக்கு பூமிக்கு
ஆமா
பொறம்போக்கு உன் பொறுப்பு
பொறம்போக்கு என் பொறுப்பு
பொறம்போக்கு ஊர் பொறுப்பு
இயற்கைக்குப் பூமிக்கு
ஆனா இப்போ ஏரி மதிக்காம நாம கண்டபடி விக்க
ஏரி பூரா கண்ணாடி கட்டிடமா நிக்க
மழை வந்து பாதி ஊரை அடிச்சிட்டுப் போச்சு
வெள்ளம் வந்து பாக்கிய முடிச்சிட்டுப் போச்சு
அட இயற்கையோட திட்டம் எதிரே
மனுஷன் போட்ட சட்டம் என்ன
காத கிழிக்குற புயலுக்குள்ள
பாதிக் கொலுசு சத்தம் தானே
வளர்ச்சி வேலை வாய்ப்பு எல்லாம் வெட்டிச் சாக்கு
ஏரி வித்தவனுக்கு ஏரி வெறும் பொறம்போக்கு
அட வளர்ச்சி வேலை வாய்ப்பு இது எல்லாம் வெட்டிச் சாக்கு
ஏரி வித்தவனுக்கு ஏரி வெறும் பொறம்போக்கு
அப்போ நீயும் நானும் என்ன கணக்கு?
அட நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் பொறம்போக்கு
நன்னன்ன நன்னன்ன நான் பொறம்போக்கு
நின்னின்னி நின்னின்னி நீ பொறம்போக்கா?
நன்னன்ன நன்னன்ன நான் பொறம்போக்கு
நின்னின்னி நின்னின்னி நீ பொறம்போக்கா?
நன்னன்ன நன்னன்ன நான் பொறம்போக்கு
நின்னின்னி நின்னின்னி நீ பொறம்போக்கா?