மனதில் நான் தொழுத நாயகர்கள்
நிஜத்தில் கண்டேன் பிம்பம் கரைந்தது
கற்பனையை மிஞ்சும் பொய்கள் ஊரும் விரும்பி நம்பும்
இதுதான் நான் கற்றுக்கொண்டது
இடதுப்பக்கம் ஒரு கதை அவள் கூவ
வலதுப்பக்கம் வேறுக் கதைப் பாடுகிறாள்
எது உண்மை எது எனக்கு உபயோகம்
எதை நம்புவது நான் செய்யும் சுயத் துரோகம்
சிந்தனை ஆற்றில் மிதந்து போய்
கண்டேன் எனது அறிவின் எல்லை
ஊரின் பேச்சின் எதிரொலிகள்
அன்றும் இன்றும் என்றும்
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
என் வாய் வழியே விழுந்த வார்த்தை எல்லாம்
வத்தல் போலே தரையில் பரப்பினாய்
உன் வாதத்துக்கு சாதகம் எது என்று
சலித்து சிலதை என்னிடம் நீட்டினாய்
ஆயிரத்தில் இருந்து இரண்டை மட்டும் எடுத்து
என் எண்ணத்துக்கு வண்ணம் பூசினாய்
கண்ணே நீ பொய் பேச என்னென்னவோ பண்ணுது
எண்ண வண்ணம் பூசிய கண்ணே
என்ன வண்ணம் பூசினாய்?
சரி தவறு; நன்மை தீது
எதிரி பந்தம்; வெற்றி தோல்வி
போர் புரட்சி நியாயம் நீதி
வசதி வறுமை; மட்டம் அருமை
சிந்தனை ஆற்றில் மிதந்துப் போய்
கண்டேன் எனது அறிவின் எல்லை
ஊரின் பேச்சின் எதிரொலிகள்
அன்றும் இன்றும் என்றும்
கருப்பு வெள்ளை
உன்னை பற்றியே நீயே பொய்கள் நம்பித் தானே வளர்ந்தாய்
வெறுப்போர் குற்றச்சாட்டைச் சாட்டை அடி போல் சுமந்தாய்
தழும்பும் விழவிழ அழுகை எழஎழ
சாட்டைக் கற்பனை இரத்தம் உண்மைதான்
இதில் யாரை நம்ப எப்படி நம்ப?
எந்த கேள்விகள் எப்போது எங்கு கேட்க?
தனியே அமைதியில் தோன்றும் தெளிவும்
கூட்டத்தின் வெப்பத்தில் ஆவி ஆக
சிந்தனை ஆற்றில் மிதந்துப் போய்
கண்டேன் எனது அறிவின் எல்லை
ஊரின் பேச்சின் எதிரொலிகள்
அன்றும் இன்றும் என்றும்
அன்றும் இன்றும் என்றும்
கருப்பு வெள்ளை
manadhinil naan thozhudha naayagargal
nijathil kandaen binbam karaindhathu
karpanaiyai minjum poigal oorum virumbi nambum
itutan nan Katrukondadhu
idathu pakkam oru kadhai aval koova
valadhu pakkam vaeru kadhai paadugiraal
edhu unmai edhu enakku ubayogam
edhai nambuvathu naan seyyum suya dhrogam
sindhanai aatril midhanthu poy
kandaen enadhu arivin yellai
oorin paechin ethiroligal
anrum inrum endrum
karuppu vellai
karuppu vellai
en vaai vazhiyae vizhundha vaarthai ellam
vathal pole tharaiyil parappinay
un vaathaathukku saathagam edhu endru
salithu siladhai ennidam neettinaai
aayirathil irundhu irandai mattum eduthu
en ennathukku vannam poosinaai
kanne nee poi pesa ennennavo pannuthu
yenna vannam poosiya kanne
enna vannam poosinaai?
sari thavaru; nanmai theedhu
edhiri bandham; vetri tholvi
por puratchi; niyayam needhi
vasadhi varumai; mattam arumai
sindhanai aatril midhanthu poy
kandaen enadhu arivin yellai
oorin paechin ethiroligal
anrum inrum endrum
karuppu vellai
karuppu vellai
unnai patriyae neeyae poigal nambi dhaane valarndhaai
veruppor kutrasaattai saattai adi pol sumandhaai
thazhumbum vizha vizha azhugai yezha yezha
saattai karpanai ratham unmaithaan
idhil yaarai namba eppadi namba?
yendha kelvigal eppodhu engu ketka?
thaniyae amaidhiyil thondrum thelivum
koottathin vetpathil aavi aagaa
sindhanai aatril midhanthu poy
kandaen enadhu arivin yellai
oorin paechin ethiroligal
anrum inrum endrum
karuppu vellai