← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Retro

Kurangan Era • 2019

சொப்பனங்கள் தரமுடியாமல்
சின்னங்கள் தந்தான் சிற்பங்கள் தந்தான்
சிறு கவிதைகள் தந்தான் ஏன்
இலக்கணம் இடையே
இடிக்கும் இடத்தில்
இருக்கும் இன்பம் என்ன
சோர்ந்த சொற்கள்
சேர்ந்து சொக்கி
சொர்கம் செலுத்தும்
சூழ்ச்சி என்ன
நீ காணும் போது
நீ காண்கிறாய் என்று
காணும் அந்த நீ யார்
அந்த உனக்கு என்ன பேரு
அந்த உனக்கு எந்த ஊரு
அந்த நீ
கூறாத ஆசைகள்
என்னென்ன
ஞானம் தேடும் பாதையில்
கடவுள் குறுக்கே வந்தால்
அவரைக் கொன்றுவிடு
இதை நான் கூறவில்லை
நேற்று ஏதோ ஒரு ஞானி
என் காதில் சொன்னது
பசியில் வாடும் மனிதன்
உணவைக் கண்டு ஓட
ருசியைச் சுவைத்த மனிதன்
இன்பம் அனைத்தும் நாட
இன்பம் கண்ட மனிதன்
அர்த்தம் எண்ணி ஏங்க
அர்த்தம் புரிந்த மனிதன்
அமைதியாக அமர
உண்மையிலே
உன்மேலே
வாழ்க்கை ஒரு கேலி கேலி கேலி
நம் காலம் தீர்ந்தால் போதும்
மரணம் கொண்டுவரும்
நல்ல செய்தி செய்தி செய்தி செய்தி
இன்று நீ நீ நான் நான்
நாளை நான் நீ நீ நான்
இன்று நான் நான் நீ நீ
நாளை நீ நான் நான் நீ
இன்று நீ நீ நான் நான்...