← Kaalame Kalipputhaan
Kaalame Kalipputhaan by Kaber Vasuki cover art

Varamum Saabamum Ft. SanT

Kaalame Kalipputhaan • 2024

-கதை-
காலமின்றி இடமில்லை
இடமின்றி அசைவில்லை
அசைவின்றி உயிரில்லை
உயிரின்றி ஏதுமுண்டோ
அசைகின்ற அசைவெல்லாம்
அசைக்கும் அனைத்தும்
இயங்கத் தருணம் தருவதே காலம் அன்றோ
இயங்க சகுனம் தரும் சாபங்களும்
காலத்தின் கொதிப்பே
இயங்க இயங்கப் பெருகும் வரங்களால்
தத்தளித்து தப்பிப்பேன்
கொதிக்கும் காலக் கடலின் கோரப்பசிக்கு
இரையாகாமல் தவடை இறுக்கி கடித்து
கப்பலை கரை சேர்க்கத் துடிக்கும் நாவளா வா
வரங்களுக்கு நன்றி சொல்
சாபங்களை ஒரு கைப் பார்ப்போம்
-பாடல்-
சாமி எல்லாருக்கும் வரமும் சாபமும்
கொஞ்ச ரேண்டமா தூவி விட்டாபடி
சூழட்டி விட்டாரடி பூமிய.
சாமி எல்லாருக்கும் நேரமும் காலமும்
கணக்குப் போட்டு கிழிச்சி போட்டாரடி
டைம்-அ விட்டா பிடி மீதிய
கலிகாலம் முத்திப் போகால காலமே களிப்புதான்
இது புரிஞ்ச பாவிக்கு எல்லாருமே சிரிப்புதான்
இறந்தேன், மறந்தேன், பிறந்தேன், திறந்தேன்,
கடந்தேன், சுமந்தேன் இருண்டேன் நான்
முற்றேன், துறந்தேன், வளர்ந்தேன், விரிந்தேன்,
மறந்தேன், பிறந்தேன், ஜொலித்தேன் நான்
விழித்தேன், கணித்தேன், சுவைத்தேன், நட்டேன்,
காத்தேன், வளர்த்தேன் பறித்தேன் நான்
கனித்தேன், பகுத்தேன், பகிர்ந்தேன், சிரித்தேன், இறந்தேன், மறந்தேன், பறந்தேன் நான்...X2
இறந்தேன், மறந்தேன், பிறந்தேன், திறந்தேன்...
விழுந்ததும் எழுந்திட போதும் தைரியம்
தேவையில்லை வரம்
சாபங்கள் சரளமாய் பெற்றும் இன்னும்
நான் மாறவில்லை நிறம்
நேரத்தை காலத்தை கிழித்து பார்த்தால்
வெறும் வெற்றிடம் தான் மீறும்
இதைப் புரிந்தவர்களுக்கு வாழும்
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே லாபம்.
பகிரப்பட்ட தேனை உண்டு நானும்
எந்தன் பின்னே சேர்த்தேன் சேனைவரம்
சபிக்கப்பட்டப் பழத்தில் இருந்து கீழே விழுந்த
விதைகள் முளைக்க மறுக்கும் மரம் போல
எந்தன் கருத்து உன் காதில் விழுந்தும்
உன் மூளை ஏற்க கொடுக்கவில்லை இடம்
உண்மை தோற்க போவதில்லை ஆனால்
ஜெய்க்கும் நேரம் தாமதித்தால் சாபம்
காலமே களி சோதித்து பார்க்குது
நாம் சோதனை எலி வரம் ஒன்று கொடுப்போம்
கடும் வேதனை வலி
சாதித்தல் சாபங்கள் பொடி
சந்தோஷத்தை தேடுர வழியில்
தாகத்தில் நீர் கண்டால்
மெயினில் பொய் கண்டால்
பையினில் பணம் கண்டால்
வாழ்ந்திட வழிவந்தால்
சோகத்தில் சிரித்திட்டால்
சிறகுகள் விரித்திட்டா
பறவ போல் பறந்திட்டா
அதிர்வுகள் பரவிட்டா
வயதது குறைந்திட்டா
உயிரது வளர்த்திட்டா
இறந்தாலும் இருந்திட்டா
மறுபடி பிறந்திட்டா
பழசெல்லாம் மறந்திட்டா
மறந்ததே மறந்திட்டா
வரத்துல வாழ்ந்திட்டா
வாழ்க்கையே சாபம்
வரமும் சாபமும் எனக்குள்ள
மறந்தும் புரிந்ததும் எனக்குள்ள
நட்டதும் வளர்த்தும் எனக்குள்ள
காத்ததும் கொடுத்ததும் எனக்குள்ள
ஆதியும் அந்ததும் எனக்குள்ள
மூழ்கிறேன் நீந்துறேன் எனக்குள்ள
விரத்தியும் விரிவதும் எனக்குள்ள
கவனித்தால் எல்லாம் செழிக்கும்ல
காலமே களி சோதித்து பார்க்குது...
சாமி எல்லாருக்கும் வரமும் சாபமும்
கொஞ்ச ரேண்டமா தூவி விட்டாபடி
சூழட்டி விட்டாரடி பூமிய.
சாமி எல்லாருக்கும் நேரமும் காலமும்
கணக்குப் போட்டு கிழிச்சி போட்டாரடி
டைம்-அ விட்டா பிடி மீதிய